தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 23, 2020, 9:59 AM IST

ETV Bharat / state

ட்ரம்ப்பிற்காக கைத்தறி ஆடையை வடிவமைத்த மூத்த தமிழர்

கோவை: இந்தியா வரும் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, இந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் பொள்ளாச்சியைச் சேர்ந்த 90 வயது முதியவர் ஒருவர் கைத்தறி ஆடையை வடிவமைத்துள்ளார்.

pollachi
pollachi

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வேட்டைக்காரன்புதூரைச் சேர்ந்தவர் விஷ்வநாதன் (90). 1949ஆம் ஆண்டிலிருந்து தையல் கலைஞராக இருந்து வரும் இவர், பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதூர் பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்களுக்கு இலவசமாக தையல் கலையை கற்றுக்கொடுத்து வருகிறார்.

அதுமட்டுமின்றி இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்கள், பிரபலமானவர்களுக்கு இலவசமாக கைத்தறியில் ஆடை தயாரித்து வழங்குவது இவரின் வழக்கமாகும். பிரதமர் மோடி, முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, முன்னாள் குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள் ஆகியோருக்கும் கைத்தறியில் உடை தயாரித்து இவர் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் காமராஜர், நடிகர் சிவாஜி கணேசன் ஆகியோருக்கும் இவர் கைத்தறி ஆடைகள் வழங்கியுள்ளார்.

கைத்தறி ஆடையை வடிவமைத்த மூத்த தமிழர்

இதனிடையே இரண்டு நாள் பயணமாக இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு, இந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில், கைத்தறியில் ஆடை தயாரித்து இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதருக்கு இவர் அனுப்பி வைத்துள்ளார்.

இதையும் படிங்க:'ட்ரம்ப் வருகைக்கு ரூ.100 கோடி செலவு செய்வதன் பின்னால் எதை மறைக்கிறீர்கள்' - பிரியங்கா கேள்வி

ABOUT THE AUTHOR

...view details