பொள்ளாச்சி :Organic Farming:ஈஷா அவுட்ரீச் சார்பில் ஆனைமலை மற்றும் கிணத்துக்கடவு ஆகிய இடங்களில் புதிதாக 2 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தொடக்க விழா பொள்ளாச்சியில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற்றது.
இதில் பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று நிறுவனங்களைத் தொடங்கி வைத்தார்.
பொள்ளாச்சி மாவட்ட துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இதனைத் தொடர்ந்து பேசிய பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம், "தொழில் துறையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு வாரங்களுக்கு முன்பு கோவையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி அதன் மூலமாக 25 ஆயிரம் கோடி ரூபாய்க்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கொண்டுவந்தார்.
விவசாயிகள் ரசாயன விவசாயத்திலிருந்து இயற்கை விவசாயத்திற்கு மாற முன் வர வேண்டும் விரைவில் தமிழ்நாடு தொழில் துறையில் முன்னேற்றம் அடையும். அதே போல் விவசாயத்தில் முன்னேற்றம் அடைய, விவசாயிகளுக்கு சட்டப்பேரவையில் வேளாண்மைக்கு என்று தனி பட்ஜெட் மூலமாக அதற்கான அதிக நிதி ஆதாரங்களை வழங்கியவர் முதலமைச்சர்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்தியாவில் 1970ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் ஒரு விவசாயியிடம் சராசரியாக 2.3 ஹெக்டெர் விவசாய நிலம் இருந்தது. ஆனால், 2015ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் அந்த அளவு 1.08 ஹெக்டராக குறைந்துள்ளது.
இப்படி மிகக் குறைந்த நிலங்களை வைத்துக் கொண்டு விவசாயிகள் தனித் தனியாக விவசாயம் செய்து லாபம் ஈட்டுவது மிகவும் சிரமம். அதற்குப் பதிலாக ஆயிரம் விவசாயிகள் ஒன்றாகச் சேர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தைத் தொடங்கி, தங்கள் பொருட்களை விற்பனை செய்தால் நல்ல லாபம் பார்க்க முடியும்.
அத்துடன், தங்கள் பொருட்களை வெளிநாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும். 2019ஆம் ஆண்டு உலக சந்தையில் டி.ஏ.பி உரம் டன் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. ஆனால், தற்போது ஒரு டன் டி.ஏ.பி உரம் 1.20 லட்சமாக பன்மடங்கு விலை உயர்ந்துள்ளது.
இதனால், மத்திய, மாநில அரசுகள் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றன.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மத்திய அரசு கடந்த நிதியாண்டில் இயற்கை விவசாய மேம்பாட்டிற்காக ரூ.6,500 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. வரும் நிதியாண்டில் இது ரூ.10 ஆயிரம் கோடியாக உயர வாய்ப்புள்ளது. ஆகவே, விவசாயிகள் ரசாயன விவசாயத்திலிருந்து Organic Farming-ற்கு மாற முன் வர வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: Sivakarthikeyan Gesture: 'டிரம்ஸ்மேனுக்காக சைகை காட்டிய சிவகார்த்திகேயன்'; நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!