தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'குரங்கு நீர் வீழ்ச்சி விரைவில் மூடப்படும்' - வனத்துறையினர் தகவல் - குரங்கு நீர்வீழ்ச்சி விரைவில் மூடப்படும்

கோவை: குரங்கு நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து குறைந்ததால், நீர் வீழ்ச்சி விரைவில் மூடப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குரங்கு நீர்வீழ்ச்சி
pollachi monkey falls

By

Published : Feb 17, 2020, 2:52 PM IST

பொள்ளாச்சி - ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட, பொள்ளாச்சி வனச்சரகத்தில் குரங்கு நீர் வீழ்ச்சி உள்ளது. தமிழ்நாடு மட்டும் இல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆழியார் அணை, குரங்கு நீர் வீழ்ச்சி, வால்பாறைக்குச் செல்கின்றனர்.

இந்நிலையில், கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் மழைப் பொழிவு இல்லாததால் குரங்கு நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றுத்துடன் செல்கின்றனர்.

குரங்கு நீர் வீழ்ச்சி

இதுகுறித்து வனத்துறை அலுவலர்கள், ' மழைப் பொழிவு குறைவு ஆனதால், அருவியில் இன்னும் பத்து நாட்கள் மட்டுமே தண்ணீர் வரும். மேலும் கோடை காலம் தொடங்கி உள்ளதால் குரங்கு நீர்வீழ்ச்சி விரைவில் மூடப்படும்' எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'இனி சத்துணவுத் திட்டம், மக்கள் திலகத்தின் சத்துணவுத் திட்டமாக இருக்காது' - வைகோ கண்டனம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details