தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் மயான பூஜை! - pollachi masaniyamman temple

கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவையொட்டி, நள்ளிரவில் மயான பூஜை நடைபெற்றது.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

By

Published : Feb 25, 2021, 1:23 PM IST

மாசாணியம்மன் கோயில் குண்டம் விழாவின் முக்கிய நிகழ்வான மயான பூஜை நள்ளிரவில் நடந்தது. இதையொட்டி, நள்ளிரவு 12.30 மணிக்கு மாசாணியம்மனுக்குச் சிறப்பு பூஜைகள் முடிந்தவுடன், மயான அருளாளி அருண், தலைமை முறைதாரர் மனோகரன் உள்பட பல அருளாளிகள் அம்மன் சூலம், பூஜை சாமான்களுடன் ஆழியாற்றங்கரையில் உள்ள மயானத்துக்குச் சென்றனர்.

அங்கு எட்டு அடி நீளத்துக்கு மயான மண்ணால் மாசாணியம்மனின் உருவம் சயனகோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில் நீராடிவிட்டு தீர்த்தம் எடுத்துவந்தார். பம்பை மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருவுருவத்தை மறைத்திருந்த திரை விலக்கப்பட்டு, அம்மன் தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

எலுமிச்சை மாலைகளால் அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பின் பம்பைக்காரர்கள் பக்திப் பாடல்களைப் பாடினர். அருளாளிக்கு அருள் வந்து, அம்மன் மீது வைக்கப்பட்டிருந்த எலும்புத் துண்டை வாயில் கவ்விக்கொண்டு கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். ஆடிக்கொண்டே அம்மன் உருவத்தை சிதைத்தார்.

அப்போது, அம்மனின் கழுத்துப்பகுதியிலிருந்து பிடிமண் எடுக்கப்பட்டது. மயான பூஜை மூன்று மணியளவில் முடிவடைந்தது. இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

ABOUT THE AUTHOR

...view details