கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள வால்பாறையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஷா நவாஸ்கான் தலைமையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகோய் ராஜ்சபா எம்பியாகப் பதவி ஏற்றதைக் கண்டித்து, சார் ஆட்சியர் வைத்தியநாதனிடம் மனு அளித்தார்.
பின்னர் ஷா நவாஸ் கான் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "உச்சநீதிமன்ற நீதிபதியாக ரஞ்சன் கோகோய் பதவியில் இருந்த காலங்களில் அவர் அளித்த ரபேல் விமானம் ஊழல், பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட வழக்குகளில் தீர்ப்புகள் சந்தேகத்துக்குரியதாக உள்ளது. வரும் காலங்களில் நீதிமன்றத்தை நாடி வரும் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.