தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா!

கோயம்பத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்
பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

By

Published : Feb 28, 2021, 11:26 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்திப் பெற்ற அம்மன் கோயில் ஆகும். இக்கோயிலின் குண்டம் திருவிழா பிப்ரவரி 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, அம்மனுக்குப் பல்வேறு கட்ட வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 26 இரவு பூக்குண்டம் வளர்க்கப்பட்டு, நேற்று (பிப். 27) காலை நாற்பத்தி ஒரு அடி நீளம் குண்டம் அமைக்கப்பட்டு, வெள்ளித் தேரில் மாசாணி அம்மன், குண்டம் இருக்கும் மைதானத்திற்கு அழைத்துவரப்பட்டது.

பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா

அதனைத் தொடர்ந்து உப்பாற்றில் நீராடிய பக்தர்கள், வரிசையாக வந்து குண்டம் இறங்கினர். இதில் கோயில் தலைமை நெறியாளர் குப்புசாமி முதலில் குண்டம் இறங்கினார். அதனைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான ஆண் பக்தர்கள் வரிசையாக குண்டம் இறங்கி, தங்கள் நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

பூக்குண்டம் இறங்குவதற்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் பூக்குண்டத்தைத் தொட்டு வணங்க மட்டும் அனுமதிக்கப்பட்டனர். குண்டம் திருவிழாவிற்குத் தமிழ்நாடு மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதில் காவலர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி, கோவை பகுதிகளிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

இதில் வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, கோவை மாவட்ட முன்னாள் மேயர் செ.ம. வேலுச்சாமி, கோவை புறநகர் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் சாந்தலிங்கம் உள்பட ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:குதிரைகள் அணிவகுப்பு கண்காட்சி!

ABOUT THE AUTHOR

...view details