பொள்ளாச்சியின் காவல் தெய்வமான மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் தேர்த்திருவிழா நடைபெற்றுவருகிறது. அதேபோல், இந்தாண்டும் தேர்த்திருவிழா தொடங்கியது. தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகப் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதால் அம்மனுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக உடலை வருத்திக் கொண்டு அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர்.
மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா - பறவை காவடி எடுத்த பக்தர்கள் - பறவைக்காவடி எடுத்து சாமி தரிசனம்
கோவை: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழா பக்தர்கள் பறவை காவடி எடுத்து சாமி தரிசனம் செய்தனர்.
pollachi-kovil-function
பொள்ளாச்சி மார்க்கெட் சாலையில் உடலில் அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்தனர். பக்தர்கள் அலகு குத்தி வாகனங்களில் தொங்கியபடி மார்க்கெட் ரோடு, வெங்கட்ராம ஐயர் வீதி, பேருந்து நிலையம், கோவை சாலை என நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து, இறுதியில் கோயில் வளாகத்திற்கு வந்தடைந்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: நாடு பயங்கரவாதத்தை சகித்துக் கொள்ளாது - மத்திய உள்துறை அமைச்சர்