தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் மயங்கி கிடந்த முதியவரை குடும்பத்தினருடன் சேர்த்த காவலர்களுக்கு குவியும் பாராட்டு! - சாலையில் மயங்கி கிடந்த முதியவர்

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் சாலையில் மயங்கி கிடந்த முதியவரை மீட்டு முதலுதவி செய்து கேரள மாநிலத்தில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் சேர்த்த கோட்டூர் காவல்துறையினரை பொது மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

காவல்துறை
காவல்துறை

By

Published : Jul 17, 2020, 1:02 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வயதான முதியவர் கரியாஞ்செட்டிபாளையம் சாலையோரத்தில் மயங்கி படுத்துக்கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலை அடுத்து கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கவியரசு, காந்தி அங்கு சென்றனர். பின் அந்த முதியோரை மயக்கம் தெளிய வைத்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் தத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் எனவும், குடும்பத்தினருடன் கோபித்துக்கொண்டு நடந்தே வந்ததாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அவருக்கு காவலர்கள் உணவு வாங்கி கொடுத்தனர். பின் கேரளாவில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டதில் சித்தூர் காவல் நிலையத்தில் ஆள் காணாமல் போன வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.

உறவினரிடம் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அந்த முதியவரின் குடும்பத்தினர் கோட்டூர் காவல் நிலையத்திற்கு வந்து அவரை அழைத்துச் சென்றனர். காவலர்களின் இந்த மனிதாபிமான செயலைக் கண்டு பொது மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details