கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பார்வையிட்டார். சாலை பணிகள் தாமதத்திற்கான காரணங்களை அலுவலர்களிடம் கேட்டறிந்தார். பின்னர், இப்பகுதியில் கல்வி நிலையங்கள் அதிக அளவில் உள்ளதால் சாலை பணிகளை உடனடியாக முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொழில் துறைகளை மேம்படுத்தவே முதலமைச்சர் வெளிநாட்டுப்பயணம்!
கோவை: கல்வி, மருத்துவம், தொழில் துறையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச்செல்லவே முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
pollachi-jeyaraman-talks-about-chief-minister-foriegn-tour
இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மருத்துவம், கல்வி போன்ற துறைகளை மேம்படுத்தவும், தொழில் துறையை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் செல்லவும், தொழில் முதலீட்டாளர்களைச் சந்திக்க முதலமைச்சர் பழனிசாமி வெளிநாடு சென்றுள்ளார். ஆனால், அவர் பொறுப்பு முதலமைச்சரை நியாமிக்காமல் சென்றுவிட்டதாக காங்கிரஸ் தலைவர் கூறுவது ஆதாரமற்றது.
வெளிநாட்டு பயணம் செல்லும் முன்பே எவ்வாறு கையாள வேண்டும் என்பதை கூறிவிட்டுதான் முதலமைச்சர் சென்றுள்ளார், என்றார்.