தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சியில் போலியோ சொட்டு மருந்து முகாம் - துணை சபாநாயகர் தொடங்கிவைப்பு! - pollachi jayaraman started polio vaccination

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் மத்திய பேருந்து நிலையம் பகுதியில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கிவைத்தார்.

பொள்ளாச்சி
பொள்ளாச்சி

By

Published : Jan 31, 2021, 10:17 PM IST

இன்று நாடு முழுவதும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையம், ரயில் நிலையம் போன்ற பகுதிகளில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் சொட்டு மருந்து முகாமை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கிவைத்தார்.

இதேபோல் நெகமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் போலியோ சொட்டு மருந்து முகாமை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தொடங்கிவைத்தார்.

ABOUT THE AUTHOR

...view details