தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு - Pollachi Jayaraman MLA

கோவை: பொள்ளாச்சியில் ரூ.75 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை துணை சபாநாயகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

pollachi-jayaraman-inspects
pollachi-jayaraman-inspects

By

Published : Jul 14, 2020, 9:54 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிணத்துக்கடவு தாலுகாவிற்கு உள்பட்ட காபுலிபாளையம், சொக்கனூர், பாலாறுபதி, முத்துக்கவுண்டனூர், வீரப்பகவுண்டனூர் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதனால் அக்கிராம மக்கள் துணை சபாநாயகரும் சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமனிடம் அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை வைத்து வந்தனர்.

இதுகுறித்து ஜெயராமன் எடப்பாடி பழனிச்சாமியிடம் எடுத்துரைத்தார். அதனால் ரூ. 75 கோடி மதிப்பீட்டில் அம்பராம்பாளையம் ஆற்றிலிருந்து வீரப்பகவுண்டன் புதூர் வரை குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தற்போது அப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் அதனை பொள்ளாச்சி ஜெயராமன் இன்று (ஜூலை14) நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் சார் ஆட்சியர் வைத்தியநாதன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கூட்டு குடிநீர் திட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details