தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பொள்ளாச்சி ஜெயராமன்!

கோவை: பொள்ளாச்சி-பாலக்காடு சாலையில் மேம்பாலம் அமையவுள்ள இடத்தை சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார்.

pollachi-jayaraman-inspected-the-bridge-constriction-between-the-pollachi-palakkad-road

By

Published : Sep 18, 2019, 11:57 AM IST

பொள்ளாச்சியிலிருந்து பாலக்காடு செல்லும் பிரதான சாலையின் குறுக்கே கோவை-பொள்ளாச்சி ரயில்வே இருப்புப்பாதை அமைந்துள்ளது. புகைவண்டி வரும் நேரங்களில் ரயில்வே கேட் மூடப்படுவதால் சாலையின் இருபுறங்களிலும் நீண்ட தொலைவுக்கு போக்குவரத்து ஸ்தம்பித்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிவருகின்றனர்.

இதனால் இப்பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக தமிழ்நாடு அரசிடம் வலியுறுத்திவந்தனர். இதனை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு பொள்ளாச்சி பாலக்காடு செல்லும் பிரதான சாலையில் ரயில்பாதை குறுக்கீடும் பகுதியில் புதிய மேம்பாலம் அமைப்பதற்காக ரூ.55 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டது.

பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு

இந்நிலையில் பாலம் அமையவுள்ள இடத்தையும் பாலம் பணி நடைபெறும்போது பொதுமக்கள் பயன்படுத்த இருக்கிற மாற்றுப்பாதை குறித்தும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசியபோது, "மேம்பாலப் பணிக்காக 40 கோடி ரூபாயும் புதிய மேம்பாலம் அமைப்பதற்காக தனியாரிடமிருந்து நிலம் கையகப்படுத்தும்போது அவர்களுக்கு நஷ்ட ஈடாக வழங்குவதற்கு 15 கோடி ரூபாயும் செலவிடப்படுகிறது.

நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்தவுடன் பாலம் அமைக்கும் பணி விரைவாக நடைபெறும். புதிய பாலம் ஒரு வருடத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்" என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details