கோவை மாவட்டம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட் திருநாவுக்கரசர் உள்ளிட்ட ஐந்து பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை, தகவல் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் தற்போது கூடுதலாக பாலியல் வன்புணர்வு என்ற பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: மேலும் ஒரு பிரிவின்கீழ் வழக்குப்பதிவு - CBCID Police
கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐந்து பேர் மீது கூடுதலாக ஒரு பிரிவின் கீழ் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
pollachi-issue
ஐந்தாவது நபராக கைதுசெய்யப்பட்ட மணிவண்ணனிடம் சிபிசிஐடி காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், பல பெண்களை மிரட்டி பாலியல் வன்முறையில் ஈடுபட்டதுடன், அதை பதிவு செய்து பெண்களை மிரட்டியுள்ளதாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
மணிவண்ணன் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பாலியல் வன்புணர்வு என்ற பிரிவினையும் கூடுதலாக இந்த வழக்கில் சிபிசிஐடி காவல் துறையினர் சேர்த்துள்ளனர்.