பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டதையடுத்து விரிவாக்க பணிகள் நடந்துவருகின்றன. இந்த கட்டடங்கள் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டப்பட்ட உபரி மண் அருகில் உள்ள இடத்தில் மலைபோல் குவியலாகக் கொட்டப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் உள்ள மதில் சுவர் அந்த மண்ணை தாக்குப்பிடிக்கும் நிலையில் இல்லாமல் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் நிலையில் உள்ளதால், மதில் சுவர் முழுவதும் மூங்கில் கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது
பொள்ளாச்சி மத்தியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வர நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவ்வழியைப் பயன்படுத்துவதால், அவர்கள் அச்சத்துடன் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பாதாள சாக்கடை திட்டத்துக்காக ரோட்டில் தோண்டப்பட்ட குழிகளை, இந்த மண்ணைக் கொட்டியாவது சீரமைத்தால் மக்கள் சிரமமில்லாமல் செல்லாம்.
மருத்துவமனை விரிவாக்க பணியால் விபத்து ஏற்படும் அபாயம் எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த மண் குவியலை உடனடியாக நகராட்சி நிர்வாக அரசு அலுவலர்கள் அகற்றினால் பெரும் உயிரிழப்பு விபத்தைத் தவிர்க்கலாம் என பொதுமக்கள் கூறுகின்றனர்.