தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி! - சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில்  மாக்கினாம்பட்டி அரசு பள்ளி

கோயம்புத்தூர் : பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி ஊராட்சியில் உள்ள அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

pollachi govt school issue

By

Published : Oct 16, 2019, 9:54 PM IST

பொள்ளாச்சியை அடுத்த மாக்கினாம்பட்டி ஊராட்சியில் அரசு உயர் நிலைப்பள்ளியும், அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகின்றது. பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இதில் அரசு தொடக்க பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை 200-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள சுற்றுச்சுவர் சாயிந்து சிதலமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இடிந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர்

தற்போது பொள்ளாச்சி பகுதியில் பெய்து வரும் மழையால் சுற்றுச்சுவர் மீண்டும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. ஆனால் இதை அங்குள்ள ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் வரை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்.

எனவே பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பு நலன் கருதி உடனடியாக சிதலமடைந்த சுவற்றை அகற்ற வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:கோவையில் நிரந்தரமாக்கப்பட்ட இரண்டு ரயில்கள் - பயணிகள் மகிழ்ச்சி

ABOUT THE AUTHOR

...view details