தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தலைமுறை தலைமுறையாக சுடுகாடு பாதை பிரச்சனை.. வேதனையில் தவிக்கும் பட்டியல் சமூக மக்கள்! - sudukadu pathai

பொள்ளாச்சி அருகே உள்ள கோவிந்தனூர் கிராமத்தில் வாழும் பட்டியலின மக்கள், பல தலைமுறைகளாக இறந்தவரின் உடல்களை ஆற்றைக் கடந்து சென்று இறுதிச் சடங்குகளை செய்யும் அவலம் தொடர்ந்து வருகிறது.

பல தலைமுறைகளாக சடலத்தை ஆற்றைக் கடந்து அடக்கம் செய்யும் பட்டியலின மக்கள்!
பல தலைமுறைகளாக சடலத்தை ஆற்றைக் கடந்து அடக்கம் செய்யும் பட்டியலின மக்கள்!

By

Published : Feb 2, 2023, 9:11 AM IST

கோவிந்தனூர் கிராமத்தில் வாழும் பட்டியலின மக்கள், பல தலைமுறைகளாக இறந்தவரின் உடல்களை ஆற்றைக் கடந்து சென்று இறுதிச் சடங்குகளை செய்யும் அவலம்

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும்மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஜனவரி 30 அன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் சார் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

அதில், “பொள்ளாச்சி அடுத்த வடக்கு ஊராட்சி ஒன்றியத்தியத்திற்கு உட்பட்ட கோவிந்தனுர் கிராமத்தில் சுடுகாட்டுக்குச் செல்ல பாதை வசதி ஏற்படுத்த தர வேண்டும்” என தெரிவித்திருந்தனர். இதனையடுத்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்குச் சென்ற ஈடிவி பாரத் செய்திகள் குழு, அங்கு கள ஆய்வை மேற்கொண்டது.

இதன்படி, கோவிந்தனூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் விவசாயக் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் கிராமத்தில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால், இறந்தவரின் குடும்பத்தை முதலில் ஆட்கொள்ளும் கவலை என்னவென்றால், ஆற்றில் தண்ணீர் ஓடுகிறதா என்பதே ஆகும்.

ஏனென்றால் சுடுகாட்டிற்கு செல்லும் பாதையில் குறுக்கிடும் ஆற்றில், எப்போதும் தண்ணீர் சென்று கொண்டே இருக்கும். அதுவும் மழைக்காலங்களில் காட்டாற்று வெள்ளமும் ஏற்படுவதுண்டு. இதனால் இறந்தவரின் உடலை எவ்வாறு கொண்டு சென்று அடக்கம் செய்ய முடியும் என்பதே அவர்களின் கவலைக்கு காரணமாக உள்ளது.

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “ஒருவர் இறந்து விட்டால், அவருக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை கூட முறைப்படி செய்ய முடியாத நிலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. பல தலைமுறைகளாக வாழ்ந்து வரும் எங்களுக்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையை சீரமைத்து தரக்கோரியும், அதற்காக ஒரு சிறிய பாலம் ஒன்று கட்டி தரக்கோரி அரசு அலுவலர்கள், அரசியல் பிரமுகர்கள் இடம் எவ்வளவோ கோரிக்கை வைத்தாகி விட்டது.

ஆனால் எங்களது கோரிக்கை, ஆற்றில் ஓடும் தண்ணீர் போலவே உள்ளது. இவ்வளவு நவீன காலத்திலும் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய நாங்கள் படும்பாடு, மிகுந்த சிரமத்துக்கு உரியது. எனவே விரைவில் ஆற்றைக் கடந்து செல்ல பாலம் அமைத்துக் கொடுத்தால், மயானத்திற்கு சென்று வர சுலபமாக இருக்கும்” என தெரிவித்தனர்.

இதையும் படிங்க:டாஸ்மாக் கடையை அகற்றக்கோரிக்கை - வார்டு உறுப்பினர்கள் பதவி ராஜினாமா

ABOUT THE AUTHOR

...view details