தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாநில குத்துச்சண்டை போட்டிக்குத் தேர்வான அரசு பள்ளி மாணவர் - Government school student selected boxing competition

கோவை: மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு பொள்ளாச்சி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர் ஒருவர் தேர்வாகியுள்ளார்.

pollachi Government school student selected boxing competition, குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு

By

Published : Nov 3, 2019, 11:11 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 160 வருடங்களாக செயல்பட்டுவருகிறது. இப்பள்ளியில் படிக்கும் ஆழியாறு பகுதியைச் சேர்ந்த திவாகரன் என்ற மாணவன் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிற்கு தகுதி பெற்றுள்ளார்.

இதுகுறித்து மாணவன் திவாகரன் கூறும்போது, 'நான் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தந்தை பெயிண்டிங் வேலை செய்கிறார். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொண்டு பரிசுகள் வெல்வதே எனது லட்சியம்' என்றார்.

மாணவனின் உடற்கல்வி இயக்குநர் செல்வகுமார் கூறும்போது, 'கடந்த வருடம் பிரபு என்கிற மாணவன் மாநில அளவில் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்தார். அதேபோல் இந்த வருடம் திவாகரன் மாநில அளவிலான குத்துச்சண்டைப் போட்டிக்கு தேர்வாகியுள்ளார். இவரும் கண்டிப்பாக போட்டியில் வெற்றிபெற்று பள்ளிக்குப் பெருமைச் சேர்ப்பார்.

வருங்காலங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு மட்டுமில்லாது நாடே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு பல தங்கப் பதக்கங்களைப் பெறுவார்கள்' எனக் கூறினார்.

குத்துச்சண்டை போட்டிக்கு அரசு பள்ளி மாணவன் தேர்வு

மேலும், அவர் பேசும்போது, எங்கள் பள்ளிக்கு தேவையான விளையாட்டு பொருட்களை தமிழ்நாடு அரசு வழங்கினால், இன்னும் பல மாணவர்களை நாங்கள் உருவாக்குவோம் எனத் தெரிவித்தார். இப்பள்ளியில் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை படித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கேளம்பாக்கம் அருகே குத்துச்சண்டை போட்டி- 500 வீரர்கள் பங்கேற்பு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details