பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நெகமம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1000க்கும் மேற்பட்ட மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு மடிக்கணினியை வழங்கினார்.
வேலூர் தேர்தல் - திமுகவை எச்சரிக்கும் பொள்ளாச்சி ஜெயராமன் - மடிக்கணினி
கோயம்புத்தூர்: வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக மீண்டும் பணபலத்தை காண்பித்தால் சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறியுள்ளார்.
இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”வேலூர் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை நிச்சயம் பெறும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அளித்தது நிறைவேற்ற முடியாத வாக்குறுதி என்று மக்கள் புரிந்துகொண்டு விழிப்புடன் இருக்கிறார்கள். திமுக கூட்டணி ஆட்சி மத்தியில் இல்லை, மாநிலத்திலும் ஆட்சி அமைக்க முடியாத அளவிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி உள்ளதால் வேலூர் மக்களவைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவை வெற்றி பெறச் செய்வார்கள். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் பணபலத்தை காட்டினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்றார்