தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விபத்துக்கான இழப்பீடு தரவில்லை - அரசுப் பேருந்து ஜப்தி

கோவை: விபத்துக்கான இழப்பீடு தாரததால் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

bus japthi

By

Published : Nov 2, 2019, 1:25 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள சமத்தூர், பொன்னாச்சியூரைச் சேர்ந்தவர் அருள்குமார் (28). இவர் கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி ஆம்னி வேனில் கோவை - சத்தியமங்கலம் சாலையில் கரியாம்பாளையம் அருகே சென்றபோது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து ஆம்னி வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதில் அருள்குமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இதனையடுத்து, இச்சம்பவம் குறித்து அருள்குமாரின் பெற்றோர் பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்தனர். 2013ஆம் ஆண்டு முதல் நடந்த இவ்வழக்கின் தீர்ப்பு 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு விபத்தில் இறந்த அருள்குமாரின் பெற்றோருக்குச் சாதகமாக சென்ற நிலையில், அரசு சார்பில் நஷ்ட ஈடாக ஒன்பது லட்சத்து இரண்டாயிரத்து 600 ரூபாய் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, அருள்குமாரின் பெற்றோரிடம் போக்குவரத்து அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தனர். ஆனால், இரண்டு முறை லோக் அதலாத் நடந்தும் அலுவலர்கள் ஆஜராகவில்லை. இதனையடுத்து நஷ்ட ஈடு தொகை 13 லட்சம் ரூபாய் தராததால் அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில், பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் திருப்பூர் - குருவாயூர் செல்லும் அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details