தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திருமூர்த்தி அணையிலிருந்து விரைவில் பாசனத்திற்கு நீர் திறப்பு' - விவசாயிகள் மகிழ்ச்சி!

கோயம்புத்தூர் : திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு வரும் 26ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொள்ளாச்சியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவுசெய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

By

Published : Sep 17, 2019, 6:09 PM IST

திருமூர்த்தி அணையிலிருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனையடுத்து, பொள்ளாச்சி பொதுப்பணித் துறை அலுவலகத்தில் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு உறுப்பினர்கள், பொதுப்பணித் துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அதிகாரிகள், விவசாயிகள், சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். திருமூர்த்தி அணையிலிருந்து வரும் 26ஆம் தேதி முதல் நான்காம் மண்டலப் பாசனத்திற்கு 4 சுற்றுக்களாக தண்ணீர் திறக்கப்படும்.

ஒரு சுற்றுக்கு 1900 மில்லியன் கனஅடி வீதம் நான்கு சுற்றுகளுக்கு 7ஆயிரத்து 600 மில்லியன் கனஅடி நீர் திறந்து விடப்படும் என்றும் இதற்கான கருத்துரை தமிழ்நாடு முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டு முதலமைச்சரின் ஒப்புதலோடு தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பின்னர், பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்படும் போது வாய்க்காலில் இருந்து மின் மோட்டார்களை பயன்படுத்தி, சிலர் தண்ணீர் திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால் கடைமடை விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை என்று விவசாயிகள் புகார் கூறினர்.

தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம்

இந்த புகார் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், 'வாய்க்காலில் இருந்து பாசனத்துக்கு செல்லும் தண்ணீர் திருடுவது சட்டப்படி குற்றம். இது போன்ற செயல்களைத் தடுக்கும் வகையில் பொதுப்பணித் துறை அதிகாரிகள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு தண்ணீர் திருட்டை தடுக்க கண்காணிப்புக் குழு அமைக்கப்படும். தண்ணீரை திருடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:

சர்தார் சரோவர் அணையை பார்வையிட்ட நரேந்திர மோடி

ABOUT THE AUTHOR

...view details