சர்வதேச புலிகள் தினம் ஜுலை 29ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டது. காடுகளின் வளங்களை மேம்படுத்தும் புலிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடத்த ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி கோட்டம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடைபெற்ற போட்டியில், பொள்ளாச்சி, டாப்சிலிப் பகுதிகளில் இருந்து 295 பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி, கைவினைப் பொருள்கள் செய்தல், முகச்சாயம் பூசுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், பழங்குடியின மாணவ மாணவிகள் சிறப்பாக பங்களிப்பு செய்திருந்தனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும், போட்டியில் வெற்றிபெற்ற 80 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.