பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பகுதியில் நவமலை மின் உற்பத்தி நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இதனைசுற்றி, மின் பணியாளர்கள் குடும்பம், மலைவாழ் மக்கள் என 250க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த இடம், ஆழியார் அணை வனப்பகுதியை ஒட்டியுள்ளதால் இங்கு மான், புலி, சிறுத்தை, கருஞ்சிறுத்தை, காட்டு யானை, காட்டுப் பன்றி என விலங்குகள் ஊருக்குள் நுழைவது வழக்கம்.
தற்போது, கோடைக் காலம் தொடங்கியுள்ளதால் காட்டு யானைகள் நீர்நிலைப் பகுதியான ஆழியார் அணைப் பகுதிக்கு படையெடுக்கின்றன.
ஒற்றை யானை அட்டகாசத்தால் வீடுகள் சேதம் இந்நிலையில், நேற்று இரவு நவமலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து ஒற்றை யானை, முருகன், பழனிமுத்து ஆகியோரின் வீடுகளைச் சேதப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், காட்டுயானையை விரட்டி அடித்தனர். மேலும், ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையிலான வனக் காவலர்களும், வேட்டை தடுப்பு காவலர்களும் ஒற்றை காட்டு யானை நடமாட்டத்தை பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.
ஒற்றை யானை அட்டகாசத்தால் சூறையாடப்பட்ட வீடுகள்