தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

போலி மதுபானம் தயாரித்து விற்ற மூன்று பேர் கைது - கள்ளச்சாரயம்

கோயம்புத்தூர்: பெள்ளாச்சியில் போலி மதுபானம் தயாரித்து விற்ற மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

arrest
arrest

By

Published : Apr 21, 2020, 3:57 PM IST

Updated : May 19, 2020, 5:51 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நெகமம் பகுதியில் போலி மதுபானம் தயாரித்து விற்கப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து பேரூர் மதுவிலக்கு காவலர்கள் தேவனாம்பாளையம், வரபருத்திக்காடு பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது எத்தனால் பயன்படுத்தி போலி மது தயாரித்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

போலி மதுபானம் தயாரித்ததாக தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் குமார், பெரிய கட்டுத் தோட்டம் கருப்புசாமி, கோவில்பாளையம் சேரன் நகரைச் சேர்ந்த கிருஷ்ணசாமி ஆகிய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் இவர்கள் புதுச்சேரியில் இருந்து மது கொண்டு வந்து விற்பதாக குடிமகன்களை ஏமாற்றி ரூ. 400க்கு விற்றதும் தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் மூவரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Last Updated : May 19, 2020, 5:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details