கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவைச் சேர்ந்த பொதுமக்களுக்கு முதியோர் ஓய்வு ஊதியம், சிறுகுறு விவசாயிகள் பயன் பெறும் வகையில் பயிர்காப்பீடு காசோலையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று வழங்கினார்.
150 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் பொள்ளாச்சி ஜெயராமன் - துணை சபாநாயகர்
கோவை: பொள்ளாச்சி சர் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் 150 பேருக்கு வழங்கினார்.

pollachi
இந்த நிகழ்வில், கடந்த மாதம் ஆழியார் அணையில் நீரில் மூழ்கி இறந்தவர் குடும்படுத்துக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் 150 நலத்திட்ட உதவிகளையும் பொள்ளாச்சி ஜெயராமன் வழங்கினார்.