பொள்ளாச்சி நகர்ப்புறப் பகுதிகளில், கடந்த நான்கு வருடங்களாக 110 கோடி ரூபாய் செலவில் பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதாளச்சாக்கடைத் திட்டக் குழிகள் முறையாக மூடப்படாததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்தச்சூழ்நிலையில், பாதாளச் சாக்கடைத் திட்டப் பணிகளை விரைந்து முடித்திடவேண்டும் என திமுக சார்பில் சார் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
பொள்ளாச்சி பாதாளச் சாக்கடைத் திட்ட முறைகேடு குறித்து திமுக புகார் மனு! - pollachi drainage issue dmk
கோவை: பொள்ளாச்சி பாதாளச் சாக்கடைத் திட்ட முறைகேடு குறித்து திமுக சார்பில் சார்பில் சார் ஆட்சியரிடம் இன்று(ஆக.3) புகார் மனு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கூறுகையில்,"பாதாளச் சாக்கடைத் திட்ட முறைகேடு குறித்து பலமுறை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகரின் பல்வேற பகுதிகளில் தோண்டப்பட்ட குழிகள் மூடப்படாமல் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த திட்டம் இழுத்தடிக்கப்படுவதால் கடந்த நான்கு ஆண்டுகளாக மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பொள்ளாச்சியில் நீதிமன்ற வளாகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா!