தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நீதி வேண்டும்- அச்சடிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்த பொள்ளாச்சி மக்கள்! - பொள்ளாச்சி மாவட்ட செய்திகள்
சாத்தான்குளம் விவகாரத்தில் பொள்ளாச்சி மாவட்ட மக்கள், 'நீதி வேண்டும்' என்று அச்சடிக்கப்பட்ட முகக்கவசங்களை அணிந்தனர்.

பொள்ளாச்சி மக்கள்
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்பிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று பொள்ளாச்சி பகுதி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என்று 5000க்கும் மேற்பட்டவர்கள், 'நீதி வேண்டும்' என்று அச்சடிக்கப்பட்ட முகக்கவசங்களை வீடு வீடாகச் சென்று கொடுத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியை இன்று செல்வராஜ் துவங்கி வைத்தார். முதல் கட்டமாக இன்று ஜோதி நகர், காமராஜ நகர், கோட்டூர் ரோடு, கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் முகக்கவசங்கள் வழங்கப்பட்டன.