தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கர்ப்பிணி பெண்களுக்கு தங்குமிடம் குறைவாக உள்ளது...! - Coimbatore Hospital Patients Welfare Meeting

கோயம்புத்தூர்: கர்ப்பிணி பெண்களுக்கு தங்குமிடம் குறைவாக உள்ளதால் அதனை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Welfare Meeting
Welfare Meeting

By

Published : Dec 12, 2019, 3:13 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. இதில், சங்க உறுப்பினர்கள், அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நலச் சங்க உறுப்பினர்கள் பேசுகையில், அரசு மருத்துவமனையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு ரத்த வங்கியில் தீ விபத்து ஏற்பட்டதால் ரத்த வகைகள் தற்பொழுது பாதுகாக்க முடியாத சூழ்நிலையில் உடுமலை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைப்பட்டுள்ளது.

அரசு தலைமை மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்க கூட்டம்

108 ஆம்புலன்ஸ் சேவை விபத்து நடந்த இடத்திற்கு போகும் முன்பு தனியார் ஆம்புலன்ஸ் சென்றுவிடுவதால் பொள்ளாச்சியிலிருந்து மேல் சிகிச்சைக்கு கோவை செல்லும் பொழுது நோயாளிகளிடம் அதிக கட்டணம் பெறுகின்றனர். தொடர்ந்து நலசங்க உறுப்பினர்கள் கூறுகையில், கர்ப்பிணிப் பெண்களுக்கு மருத்துவமனையில் தங்குமிடம் குறைவாக உள்ளதால் விரிவாக்கம் செய்ய வேண்டும் என உள்ளிட்ட குறைகளை சார் ஆட்சியரிடம் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:

கின்னஸ் சாதனைக்காக கோயில்களுக்கு சுற்றுப்பயணம் செய்யும் சிவகங்கை சகோதரர்கள்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details