கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல் தலைமையில் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளை முன்னிட்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து கோவை ரோடு, மகாலிங்கபுரம், பல்லடம் ரோடுவரை மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி புனித யாத்திரையை காங்கிரஸ் கட்சியினர் நடத்தினர்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சக்திவேல் கூறுகையில், "மாகத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாக புனித யாத்திரை நடைபெற்றது. மேலும் மத்திய அரசுக்கு சாவுமணி அடிக்கும் விதமாகவும் காங்கிரசின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும் மத்திய அரசு இருக்கிறது.