கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர், மாணவர்கள் என தமிழகம் முழுவதுமாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க தொடங்கியுள்ளது.
'பொள்ளாச்சிக்கு எதற்கும் அசராத அஸ்ரா வேண்டும்' - உரக்க ஒலிக்கும் மீம்ஸ் குரல்! - மீம்ஸ்
கோவை: பொள்ளாச்சியில் இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை விசாரிக்க நேர்மையான காவல் துறை அதிகாரிகளை நியமனம் செய்ய வலியுறுத்தி சமூகவலைதளங்களில் மீம்ஸ் பரப்பப்பட்டு வருகிறது.
புகார் அளித்த பெண்ணின் பெயர் முகவரியை வெளியிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை மாற்றம் செய்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில் நேர்மையான காவல்துறை அதிகாரி அஸ்ராகார்க் மற்றும் சைலேந்திர பாபு ஆகியோரை விசாரணை அதிகாரியாக நியமித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சமூகவலைதளங்களில் மீம்ஸ் பரப்பப்பட்டு வருகிறது.
நேர்மையான அலுவலர் நியமனம் செய்ய வேண்டும், 'பாலியல் குற்றவாளிகளை அலறவிட அஸ்ரா கார்க் வேண்டும்', 'ஆளுமை அஸ்ரா கார்க், வேண்டும்', 'அரசே நீதி கொடு அஸ்ராகார்க்கை பொள்ளாச்சி அனுப்பி வை' போன்ற மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.