தமிழ்நாடு

tamil nadu

பொள்ளாச்சி விவகாரம் - குற்றவாளிகளிடம் வழங்கப்பட்டது குற்றப்பத்திரிகை நகல்

By

Published : Jan 28, 2020, 4:18 PM IST

Updated : Jan 28, 2020, 11:08 PM IST

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளிடம் இன்று குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது.

பொள்ளாச்சி வழக்கு வேறு அமர்விற்கு அதிரடி மாற்றம்!
பொள்ளாச்சி வழக்கு வேறு அமர்விற்கு அதிரடி மாற்றம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் சிலர் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழ்நாட்டையே உலுக்கியது. வழக்கு கடந்து வந்த பாதை இதுவரை...

26.02.2019- சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர்.
13.03.2019- சி.பி.சி.ஐ.டி வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது
26.04.2019- வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்படுகிறது
24.05.2019- சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
22.06.2019- குற்றவாளிகள் கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.

01.09.2019 குண்டர் சட்டம் நீக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், திருநாவுக்கரசு ஆகியோர் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதற்காக சேலம் மத்திய சிறையிலிருந்து இன்று காலை அவர்களை கோவை குற்றவியல் நீதிமன்றத்திற்கு காவலர்கள் அழைத்து வந்தனர். அரைமணி நேர விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் 1000 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டன. இவர்கள் ஐந்து பேருக்கும் வருகின்ற 11ஆம் தேதிவரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

வழக்கானது தலைமை குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார். இது முக்கியமான வழக்கு என்பதால் இந்த வழக்கானது அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி வழக்கு வேறு அமர்விற்கு அதிரடி மாற்றம்!

மேலும் ஐந்து பேர் மீதான குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கப்பட்டது. அதன்பின் அனைவரையும் வருகின்ற 11ஆம் தேதிவரை சேலம் மத்திய சிறையில் அடைக்க காவல் துறையினர் அழைத்துச் சென்றனர். வருகின்ற 11ஆம் தேதி அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி குறித்த தகவல்கள் பின்னர்தான் தெரியவரும்.

இதையும் படிங்க...ஒமர் அப்துல்லாவிற்கு ’டிரிம்மர்’ அனுப்பிய தமிழ்நாடு பாஜக!

Last Updated : Jan 28, 2020, 11:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details