தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொள்ளாச்சி வழக்கு: கைதான மூன்று பேருக்கும் ஆண்மைப் பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு - Pollachi case

கோவை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான மூன்று பேருக்கும் ஆண்மைப் பரிசோதனை செய்ய மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பொள்ளாச்சி வழக்கு: கைதான மூன்று பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு
பொள்ளாச்சி வழக்கு: கைதான மூன்று பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய நீதிமன்றம் உத்தரவு

By

Published : Jan 20, 2021, 9:25 PM IST

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேரை (அருளானந்தம், பாபு, ஹெரோன்பால்) ஜனவரி 6ஆம் தேதியன்று கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் மூன்று பேருக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத்தொடர்ந்து அவர்கள் மூவரும் கோபி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இன்று(ஜனவரி 20) மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கினை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி நந்தினிதேவி மூவருக்கும் பிப்ரவரி 3ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும் கைதான மூன்று பேருக்கும் ஆண்மைப் பரிசோதனை செய்ய சிபிஐ சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு மகளிர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மூவருக்கும் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆண்மைப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: தற்கொலைகளைத் தடுக்கவே ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்குத் தடை:அரசு பதில் மனு

ABOUT THE AUTHOR

...view details