கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட பேருந்துகள், கோவைக்கு செல்கின்றன.
தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மறியல். இந்நிலையில், பேருந்து ஓட்டுநர்கள் மத்தியில் அடிக்கடி டைமிங் விவகாரம் நிலவி வரும் சூழலில், பொள்ளாச்சியில் இருந்து கோவைக்கு இன்று காலை 11:15 மணியளவில் புறப்பட்ட தனியார் பேருந்தை முந்திக்கொண்டு, அரசு பேருந்து ஒன்று நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்கு முன்பாகவே வழிமறித்து நின்றது.
மேலும், தனியார் பேருந்துக்கு வழி விடாமல் பயணிகளை ஏற்றியதால் ஆத்திரமடைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்கள் 20க்கும் மேற்பட்டோர், அரசு பேருந்து முன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் துறையினர், தனியார் பேருந்து ஓட்டுநர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.
இது குறித்து தனியார் பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் எங்களுக்கு டைமிங் பிரச்னை ஏற்படுகிறது. இதனால் பல நேரங்களில் பேருந்துகளை அதிவேகமாக இயக்க நேரிடுகிறது என்றனர்.