தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆட்கொல்லி 'அரிசி ராஜா'வை மயக்க ஊசி போட்டு பிடித்த வனத் துறை! - operation ‘Arisi Raja’

கோவை:  அர்த்தநாரிபாளையத்தில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி 'அரிசி ராஜா'வை வனத் துறையினர் மயக்க ஊசி போட்டு பிடித்தனர்.

Pollachi Arisi raja elephant cached

By

Published : Nov 14, 2019, 7:36 AM IST

'8 பேரை கொன்ற 'அரிசி ராஜா'

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அர்த்தநாரிபாளையத்தில் சுற்றித்திரிந்த ஆட்கொல்லி காட்டுயானை 'அரிசிராஜா' இதுவரை 8 பேரைக் கொன்றுள்ளது. இந்த யானையால் மேலும் 7 பேர் படுகாயமும் அடைந்துள்ளனர்.

அரிசி ராஜாவைப் பிடிக்க உத்தரவு

யானையைப் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்திய நிலையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானையைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.

பிடிபட்ட ஆட்கொல்லி 'அரிசி ராஜா'

பிடிபட்ட அரிசி ராஜா

இந்நிலையில் நேற்று மாலை பருத்தியூர் தனியார் தோட்டத்தில் நின்றுகொண்டிருந்த காட்டுயானை 'அரிசி ராஜா'வை வனத் துறை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனையடுத்து, அதனை கூண்டுக்குள் அடைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிக்க: மதுபாட்டில்களை வைத்து காட்டு யானைகளை விரட்டும் கிராம மக்களின் புது யுக்தி

ABOUT THE AUTHOR

...view details