தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

100 நாட்களாக நிரம்பியுள்ள ஆழியார் அணை - விவசாயிகள் மகிழ்ச்சி! - பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை

கோவை : பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை தொடர்ந்து 100 நாட்களாக நிரம்பி உள்ளதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

pollachi aliyar dam full
pollachi aliyar dam full

By

Published : Dec 9, 2019, 10:28 AM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார் அணை பொதுமக்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பயனுள்ளதாகும். விவசாயத்திற்கு ஆழியார் அணை நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், பொள்ளாச்சி மக்களுக்கு குடிநீர் தேவைக்கு பயன்படுகிறது. கடந்து சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர் மழை பெய்ததால், ஆழியார் அணை முழு கொள்ளளவை எட்டும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதனால், தமிழ்நாடு அரசு முழு கொள்ளளவு கொண்ட அணைகளை விவசாயத்திற்கு திறந்து விடும்படி அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணை, 100 நாட்களாக 119 அடியில் உள்ளதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஆழியார் அணை 120 அடி கொள்ளவை எட்டியது

மேலும், கடந்த ஆண்டை போல குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆழியார் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அணை நிரம்பி இருக்கும் ரம்மியமான காட்சிகளை புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

இதையும் படிங்க:

குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக்; போராட்டத்தைக் கையில் எடுத்த பெண்கள்!

ABOUT THE AUTHOR

...view details