மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் போராட்டம் நடத்தினர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு - மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது - வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராட்டம்
கோயம்புத்தூர்: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற மனிதநேய ஜனநாயக கட்சியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
மனிதநேய ஜனநாயக கட்சியினர் கைது
அப்போது, மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பிய அவர்கள், திருவள்ளுவர் திடலில் இருந்து பேரணியாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, மனிதநேய ஜனநாயக கட்சியினர் 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.