தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாலையில் சுற்றியவர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய போலீஸ்! - கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர்

கோயம்புத்தூர்: ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் சுற்றித்திரிந்த பொதுமக்களுக்கு காவல் துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.

முகக்கவசம் வழங்கிய காவல் துறையினர்
முகக்கவசம் வழங்கிய காவல் துறையினர்

By

Published : Mar 26, 2020, 6:49 PM IST

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய அரசு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேறாமல் உள்ளனர்.

இந்நிலையில், கோயம்புத்தூர் கருமத்தம்பட்டி நால்ரோடு பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையில் சுற்றிய நபர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கரோனா வைரஸ் என்றால் என்ன, எப்படி பரவுகிறது என்பது குறித்து எடுத்துரைத்து, முகக் கவசங்களை வழங்கினர்.

மேலும், தேவையின்றி ஊர் சுற்றுபவர்களைப் பிடித்து கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென்ற நூதன தண்டனையை அவர்களுக்கு வழங்கினர். இதையடுத்து, திருமணம் செய்த புதுமண தம்பதியினர், அவிநாசி நோக்கி கருமத்தம்பட்டி வழியாக காரில் சென்றனர்.

முகக்கவசம் வழங்கிய காவல் துறையினர்

அவர்களை மடக்கிய காவல் துறையினர், முகக் கவசம் வழங்கினார். பின்னர், அவர்களுக்கு கரோனா வைரஸ், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர். காவல் துறையினரின் இந்தச் செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினார்.

இதையும் படிங்க: கோவையில் 144 தடையை மீறி சாலையில் சுற்றிய 122 பேர் கைது

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details