பொள்ளாச்சி அருகே உள்ள கேரளா எல்லையான நடுப்புணி, கோபாலபுரம், மீனாட்சிபுரம், கோவிந்தபுரம் வழியாக இருசக்கர வாகனம் மற்றும் கார்கள் மூலம் தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் ஆலோசனைப்படி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வைரம் தலைமையில் கார்த்தி மற்றும் காவல் துறையினர் தனிப்படை அமைத்து குஞ்சுபாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அப்துல் ஜாபரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் கேரளாவுக்கு சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் அவர் வைத்திருந்த 250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் ஜமீன் ஊத்துக்குளி பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டபோது, மாருதி காரில் வந்த பாருக், மணிவண்ணாமலை பகுதியை ஒருவர் என மொத்தம் மூன்று பேர் 800 கிலோ ரேஷன் அரிசியை விற்க முயன்றுள்ளனர்.