பொள்ளாச்சி: வால்பாறை சரகம் ஆழியாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் தலைமை காவலர் பிரபு. இவர் கோட்டூர் காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
பிரபு தனது நண்பர்களுடன் மதியம் சாப்பிட வர இருப்பதாகவும், கோழிக்கறி சமைத்து வைக்கும்படியும் மனைவியிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க மதியம் வீட்டிற்கு சென்ற பிரபு, ஏன் கோழிக்கறி சமைக்கவில்லை? என கேட்டு தகராறு செய்துள்ளார். தொடர்ந்து ஆத்திரத்தில் வீட்டிலிருந்த சுத்தியல் மூலம் மனைவியை பலமாக தாக்கியுள்ளார்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது பிரபுவின் மனைவி வலியில் துடித்துள்ளார். உடனே அவரை மீட்டு எலும்பு முறிவுக்கான சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவலர்கள், பிரபு மனைவியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
உள்ளூரில் தேவையில்லாத நண்பர்களின் சகவாசம் அதிகரித்துவிட்டதால் தனது கணவரை வேறு எங்காவது வெளியூருக்கு பணி மாறுதல் செய்யுமாறு கண்ணீர் விட்டு கதறியுள்ளார் பிரபு மனைவி. இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கோழி முட்டைகளைக் கக்கிய நல்ல பாம்பு - மெய்சிலிர்க்கும் காட்சி!