தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துறையினரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேர் கைது

கோவை: ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலரைத் தகாத வார்த்தைகளில் பேசிய மூன்று பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.

police-issue
police-issue

By

Published : Feb 15, 2020, 5:02 PM IST

கோவை இருகூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலனி அருகே சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் தலைமை காவலர் ஜான்சன் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒண்டிபுதூர் இருகூர் இடையே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சந்தேகத்திற்கு இடமான மூன்று நபர்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இவற்றைப் பார்த்த காவலர் ஜான்சன், அவர்களிடம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர்கள் ஜான்சனிடம் தகாத வார்த்தைகளில் பேசியதாகத் தெரிகிறது. இந்நிலையில் அவர்கள் மூவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். அவர்களை விசாரித்தபோது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சண்முகம் (26), அரூர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, வேலூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பதும் தெரியவந்தது.

காவல் துறையினரைத் தாக்கிய மூன்று பேர் கைது

இவர்கள் மூன்று பேர் மீதும் அரசு ஊழியரைப் பொது இடத்தில் தகாத வார்த்தைகளில் பேசியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: CAA-க்கு எதிராக நள்ளிரவில் போராடிய இஸ்லாமிய அமைப்பினர் மீது வழக்குப்பதிவு!

For All Latest Updates

TAGGED:

Police issue

ABOUT THE AUTHOR

...view details