தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை திருட்டு - போலீஸ் விசாரணை - நகை திருட்டு

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 6 சவரன் நகை மற்றும் 9 லட்சம் பணத்தை திருடிச் சென்ற கும்பலை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Feb 11, 2023, 4:49 PM IST

கோயம்புத்தூர்:பொள்ளாச்சி மகாலிங்கபுரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர், தனது உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் சென்று விட்டு இன்று (பிப்.11) அவரது வீட்டிற்கு திரும்பினார். அப்போது, அவரது வீட்டின் பின்புறம் உள்ள கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்து 9 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 6 சவரன் நகை திருடு போனது தெரியவந்தது. உடனடியாக ராமச்சந்திரன் இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், திருட்டு நடந்த இடத்தில் தடையங்களை சேகரித்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்து, திருட்டு கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:வீடியோ: எடை குறைவாக வழங்கப்பட்ட ரேசன் அரிசி.. வீடியோ எடுத்து வெளியிட்ட பயனாளி..

ABOUT THE AUTHOR

...view details