தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோடநாடு கொலை வழக்கு - முன்னாள் எம்எல்ஏவிடம் தீவிர விசாரணை - முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி

கோடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக தனக்கு தெரிந்த உண்மைகளை காவல் துறையிடம் தெரிவித்துள்ளதாக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்எல்ஏ-விடம் விசாரணை
முன்னாள் எம்எல்ஏ-விடம் விசாரணை

By

Published : Apr 15, 2022, 10:04 PM IST

கோயம்புத்தூர்:கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல் துறை தலைவர் சுதாகர் கண்காணிப்பில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுகுட்டியை தனிப்படை காவல் துறையினர் விசாரணைக்கு அழைத்திருந்தனர்.

கோவை காவலர் பயிற்சிப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விசாரணையில், தனிப்படை முன்பாக ஆறுகுட்டி விசாரணைக்கு ஆஜரானார். இன்று (ஏப்.15) பிற்பகல் 12 மணியளவில் விசாரணையைத் தொடங்கிய நிலையில் மாலை நிறைவடைந்தது. விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆறுகுட்டி, “கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜ் ஒன்றரை வருடம் தன்னிடம் பணிபுரிந்த நிலையில் காவல் துறையினர் தன்னை விசாரணைக்கு அழைத்தனர்.

எனக்குத் தெரிந்த உண்மைகளை காவல் துறையினரிடம் கூறியுள்ளேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறியிருக்கிறேன். கனகராஜ் என்னிடம் ஓட்டுநராக வேலை பார்த்தது உண்மைதான். எப்போது கூப்பிட்டாலும் விசாரணைக்கு வருகின்றேன் என்று சொல்லி இருக்கிறேன். அவர் என்னிடம் இருந்து வேலையை விட்டுச்சென்றவுடன், அவருடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை'' எனத் தெரிவித்தார்.

முன்னாள் எம்எல்ஏ-விடம் விசாரணை

தொடர்ந்து, விசாரணை நடைபெற்ற இடத்திற்கு ஆறுகுட்டியுடன் அவரது இரு மகன்கள், மகள் ஆகியோர் மட்டுமே வந்த நிலையில், அதிமுகவைச் சேர்ந்த தொண்டர்கள் யாரும் விசாரணை நடைபெற்ற காவலர் பயிற்சிப் பள்ளி வளாகத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:'வாத்தி ரெய்டு... வாத்தி ரெய்டு' - அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு

ABOUT THE AUTHOR

...view details