கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள டாப்சிலிப்பில் உலா நிதி வனச்சரகம் குமட்டி செட்டில்மென்ட்டியைச் சேர்ந்த பழங்குடியின மாணவன் விஷால், அங்குள்ள பழங்குடியின மாணவர் உண்டு-உறைவிடப் பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு படித்துவருகிறான்.
அப்பள்ளியில் மாணவர்கள் 35 பேரும் மாணவியர் 27 பேரும் என மொத்தம் 62 பேர் தங்கி கல்வி பயின்றுவருகின்றனர். இந்நிலையில், நேற்று மாலை உணவருந்தும் நேரத்தில் பள்ளி வளாகத்திற்குள் இருந்த விஷால் திடீரென காணவில்லை.
இந்நிலையில் காணாமல்போன மாணவனைத் தேடும் பணியில் அந்தப் பள்ளியில் பணியாற்றுகின்ற ஆசிரியர்களும் வனத் துறையைச் சேர்ந்தவர்களும் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து தேடிய நிலையிலும் நேற்று மாலை 5 மணிவரை விஷாலை கண்டுபிடிக்க முடியாததால் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வனஜா, மாணவனின் பெற்றோர் கண்ணன்-மனோன்மணி ஆகியோர் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து விஷாலை தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுவருகின்றனர்.
பள்ளியிலிருந்து மாயமான சிறுவன்