தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வீட்டில் தனியாக இருந்த முதியவர் கொலை! - கோவையில் முதியவர் கொலை வழக்கு

கோயம்புத்தூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவரை கொலை செய்த கும்பல், வீட்டிலிருந்த நகை, பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது.

வீட்டில் தனியாக இருந்த முதியவர் கொலை
வீட்டில் தனியாக இருந்த முதியவர் கொலை

By

Published : Oct 2, 2020, 7:01 PM IST

கோயம்புத்தூர்: சிங்காநல்லூர் பகுதியில் தனியாக இருந்த முதியவரை கொலை செய்து, நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற அடையாளம் தெரியாத கும்பலை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (68). இவரது மனைவி சாரதா, மகன் பார்த்தசாரதி ஆகியோர் காலமான நிலையில், இவரது மகள் மட்டும் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

மேலும், கோவையிலுள்ள இவரது சொத்துகளை தனியாக நிர்வகித்து, வந்துள்ளார். தற்போது, கரோனா காலம் என்பதால் வீட்டில் இருந்த வேலையாள்களையும் நிறுத்திவிட்டு, வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று (அக்.2) காலை நீண்ட நேரமாகியும் வீட்டினுளிருந்த கிருஷ்ணமூர்த்தி வெளியே வராததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டினுள் சென்று பார்த்துள்ளனர். அப்போது அவர் ரத்த வெள்ளத்தில் நாற்காலியில் அமர்ந்தபடியே இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உடனடியாக அவர்கள் சிங்காநல்லூர் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து வந்தனர். பின்னர், கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்ட காவல் துறையினர், உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீட்டில் தனியாக இருந்த முதியவர் கொலை

தொடர்ந்து, வீட்டினுள் நடத்திய சோதனையில், பீரோவின் கதவு உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகைகள், பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்த தெரியவந்தது. மேலும், வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரையும் கொள்ளையடித்துச் சென்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: விஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவன்: உறவினர்கள் சாலை மறியல்

ABOUT THE AUTHOR

...view details