கோவை மாவட்டம் செல்வபுரம் காவல் நிலைய காவல் துறையினர் நேற்றிரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது உக்கடம் பைபாஸ் சாலையில் ஐந்து பேர் கும்பலாக நின்று கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் கையில் அருவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்ததால், காவல்துறையினர் அவர்களை விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது அந்தக் கும்பலில் மூன்று பேர் கத்தியை காண்பித்து தங்களை வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு காவலர்களை மிரட்டினார்கள்.
இதையடுத்து மூவரையும் பிடித்து, காவலர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் செந்தில்குமார் (எ) குண்டு செந்தில், உமர் பரூக், சதகதுல்லாஹ் (எ) ஷாஜகான் என்பதும், மற்ற 2 இருவர் மாரியப்பன் மற்றும் கபீர் என்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நடத்திய விசாரணையில் செந்தில்குமார், உமர் பரூக், சதகதுல்லாஹ் ஆகிய மூவரும் திருப்பூர் மற்றும் கேரளாவில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:வாணியம்பாடி, மது விற்ற மூன்று பெண்கள் கைது