மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி நீட் தேர்வில் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த, எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த மாணவன் அன்பரசன் 235 மதிப்பெண்களும், முத்தூரைச் சேர்ந்த மாணவி புனித தனுஷ்யா 208 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
இருவரும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மாணவன் அன்பரசன், மாணவி புனித தனுஷ்யா ஆகியோருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைத்துள்ளது. அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளதால் மாணவர்களின் பெற்றோர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.