தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டுகட்டா போலி 2,000 ரூபாய் நோட்டுகள்... சிக்கிய 3 பேர்.. - கோயில் கலசம்

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே கட்டுகட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

fake currency  coimbatore  fake two thousand rupee notes  coimbatore news  coimbatore latest news  கோயம்புத்தூர்  போலி ரூபாய் நோட்டுகள்  கள்ள நோட்டுகள்  பெரியநாயக்கன்பாளையம்  போலி 2000 ரூபாய் நோட்டுகள்  கோயில் கலசம்  லேப்டாப்
கள்ள நோட்டு

By

Published : Oct 8, 2022, 5:41 PM IST

கோயம்புத்தூர்:பெரியநாயக்கன்பாளையம் அருகே பிரஸ் காலனியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சந்தேகத்திற்கு இடமான சிலர் தங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அவ்வீட்டை சோதனையிட்டனர். அப்போது, அங்கு அட்டை பெட்டிகளில் கட்டுகட்டாக போலி 2,000 ரூபாய் நோட்டுகள் பதுக்கு வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக அந்த வீட்டில் இருந்த விருதுநகரை சேர்ந்த காளிமுத்து, நாமக்கல்லை சேர்ந்த விஜயகுமார், மோகன்ராஜ் ஆகிய மூன்று பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 9 அட்டை பெட்டிகளில் இருந்த போலி 2,000 ரூபாய் நோட்டுகள் மற்றும் 2 கோயில் கலசம், லேப்டாப், செல் போன்களை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

கைதானவர்களிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் அவர்கள் இருடியம் இருப்பதாக கூறி மோசடி செய்யும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலுன் இச்சம்பவம் தொடர்பாக சடகோபன் என்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படங்க: கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 2,765 குவிண்டால் ரேஷன் அரிசி பறிமுதல்

ABOUT THE AUTHOR

...view details