கோவை:ஆர்.எஸ்.புரம் கென்னடி தியேட்டர் வளாகத்தில் பால் பண்ணை நடத்தி வருபவர் ஜனார்த்தனன். இவரது மனைவி அபிநயா. கடந்த 2021 ஆம் ஆண்டு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி பாரதி ஆகியோர் தாங்கள் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கென்னடி தியேட்டர் வளாகத்திற்குச் சொந்தக்காரர் என்று கூறி அபிநயாவிடம் பால் பண்ணை நடத்துவதற்காக காலி இடத்தை வாடகைக்குக் கொடுப்பதாகக் கூறி உள்ளனர்.
அங்கு மாட்டுப் பண்ணை வைப்பதற்கு ரூபாய் 60 லட்சம் செலவாகும் என்று அபிநயா கூறி உள்ளார். அதற்கு மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தாராளமாக மாட்டுப் பண்ணை வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறி உள்ளனர். இந்த மாட்டுப் பண்ணைக்கு மாத வாடகை ரூபாய் 30 ஆயிரம் எனவும் அட்வான்ஸ் தொகையாக ரூபாய் 3 லட்சம் எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இவ்வாறாக 3 மாத காலமாக வாடகையைப் பெற்றுக் கொண்டிருந்த மணிகண்டன், பாரதி மீண்டும் இந்த இடத்திற்கு வாடகை வேண்டாம் எனவும் அவர்களுக்குப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி குத்தகையாக மாற்றிக் கொள்ளலாம் என பத்து வருடத்திற்குக் குத்தகை எனப் பேசி முடிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து மணிகண்டன் மற்றும் பாரதி 21 லட்சத்து 50 ஆயிரம் வங்கிக் கணக்குகளிலும், பணமாக 30 லட்சமும் என 51 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அபிநயா கொடுத்து உள்ளார்.