கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் புனிதா (37). திருமணமாகி விவாகரத்தான புனிதாவை கோவையைச் சேர்ந்த கிஷோர் (35) என்பவர் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும், புனிதாவுடன் தனிமையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி புனிதாவிடம் அடிக்கடி பணமும் பறித்துள்ளார்.
பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவருக்கு போலீஸ் வலை வீச்சு - woman
கோவை: பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தலைமறைவான வாலிபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
போலீஸ்
இது குறித்து புனிதா பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கிஷோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள மகளிர் காவல் துறையினர் தலைமறைவாக உள்ள கிஷோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.