தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நாம் தமிழர் கட்சி சீமான் மீது தேசதுரோக வழக்கு - சீமான் பேசி 75 நாள்களுக்கு பிறகு போலீசார் வழக்குப்பதிவு

கோயம்புத்தூர்: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது குனியமுத்தூர் காவல் துறையினர் தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் பேசியதற்கு தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

seeman
seeman

By

Published : May 9, 2020, 7:31 PM IST

கோயம்புத்தூர் ஆத்துப்பாலம் பகுதியில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற "ஷாகின்பாக்" போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக உரையாற்றினார். இது தொடர்பாக, அவர் மீது 124 (ஏ) தேசதுரோக வழக்கு, 153 (ஏ) விரோத உணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் பேசுதல் ஆகிய இரு பிரிவுகளில் குனியமுத்தூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உதவி ஆய்வாளர் கணேஷ்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த சிஏஏ சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும், இஸ்லாமியர்கள், எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், கடந்த பிப்பரவரி 22ஆம் தேதி கோயம்புத்தூர் ஆத்துப்பாலம் பகுதியில் நடந்த 'ஷாகின்பாக்' போராட்டத்தில் பேசிய சீமான், "இந்தியா என்ற நாடு எப்போதும் இருந்ததில்லை, இனியும் இருக்கப் போவதில்லை என தந்தை பெரியார் சொன்னார். வழக்குப் போடுவதென்றால் பெரியார் மீது போட்டு விட்டு அப்புறம் என மீது போடட்டும் என தெரிவித்தார்.

இந்திய குடிமகன் என்பதற்கு எதையெல்லாம் காட்ட வேண்டும் என்பதை இந்த அரசு சொல்லவில்லை. ஏர்வாடியில் அடைத்து வைத்துள்ள பைத்தியக்காரன் கூட இந்த மாதிரி செய்ய மாட்டார்கள் சி.ஏ.ஏ இஸ்லாமியர் மக்களுக்கு எதிரானது அல்ல. ஒட்டுமொத்த மக்களுக்கும் எதிரானது. பிரதமர் மோடி, அமித் ஷா, மத்திய அமைச்சர்கள், மக்களவை உறுப்பினர்களை முதலில் குடியுரிமை சான்றிதழை காட்ட சொல்லி இனி போராட வேண்டும். இவர்களை போல பிராடுகாரர்கள் யாரும் இருக்க முடியாது" என்று அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:கோவிட்-19: விடை கிடைக்காத ஏராளமான வினாக்கள்! பதில் தேடும் சிறப்புத் தொகுப்பு...

ABOUT THE AUTHOR

...view details