ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் செயல்படாத நிலையில் கோவை மாவட்டத்தில் கள்ளசாராயம் விற்பனை அதிகரித்துள்ளது. இதுவரை 35 பேர் வரை கள்ளச்சாராயம் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் காய்ச்சியவரை அடித்து வெளுக்கும் காவல் துறை இந்நிலையில், கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி வாகாரயம்பாளையத்தில் கடந்த 28ஆம் தேதி கள்ளச்சாராயம் காய்ச்சியது தொடர்பாக நான்கு பேரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
அதில், மாரிராஜ் என்பவரைக் காவல் நிலையத்தில் வைத்து காவலர்கள் அடித்து வெளுக்கும் காட்சிகள் வாட்ஸ்அப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாரிராஜை கையை நீட்டச்சொல்லி, நெகிழிப் பைப்பால் காவல் துறையினர் அடித்து வெளுக்கின்றனர். இந்தக் காணொலி சாராயம் காய்ச்சும் நபர்கள் மத்தியில் கிலியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:அரசு ஊழியர்கள் குறித்து அவதூறு - இருவர் மீது வழக்கு